அஸ்வின் ஓய்வு
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் 2ஆவது நாள் மட்டுமே முழுமையாக நடைபெற்றது.
ஏனைய 4 நாட்களுமே மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்டதுடன், இன்று 5ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆட்டம் சமனிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததுடன், சக வீரர்களுக்கும் பிசிசிஐக்கும் நன்றி தெரிவித்தார்.