Thursday, April 10, 2025
Homeசினிமாகாதலிக்க நேரமில்லை: நாளை வெளியாகும் லாவண்டர் நேரமே பாடல்

காதலிக்க நேரமில்லை: நாளை வெளியாகும் லாவண்டர் நேரமே பாடல்

காதலிக்க நேரமில்லை லாவண்டர் நேரமே பாடல்

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ளது.

ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான `என்னை இழுக்குதடி’ சில வாரங்களுக்கு முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான லாவண்டர் நேரமே நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு புதுப்போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories