Monday, March 10, 2025
Homeகிரிக்கெட்இந்திய கிரிக்கெட்ரோகித் விக்கெட்டை வீழ்த்தி கபில் தேவ் சாதனையை சமன் செய்தார் கம்மின்ஸ்

ரோகித் விக்கெட்டை வீழ்த்தி கபில் தேவ் சாதனையை சமன் செய்தார் கம்மின்ஸ்

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதன்பின்னர், களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர். இதனால் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில், கடந்த சில போட்டிகளாக ரன்களை குவிக்க தடுமாறும் ரோகித் சர்மா இந்த போட்டியிலும் 10 ரன்களுடன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சிக் கொடுத்தார்.

இதன்மூலம், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது, டெஸ்ட் போட்டிகளின் போது எதிரணியின் கேப்டனை அதிக முறை வீழ்த்திய கேப்டன் என்ற பட்டியலில் தற்போது நான்காவது முறையாக ரோகித் சர்மாவை வீழ்த்திய பேட் கம்மின்ஸ் இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் ரிச்சி பென்னட், இம்ரான் கான் ஆகியோர் முதலிடத்தில் உள்ளதுடன், கபில் தேவ் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories