‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
இந்த ஆடுகளத்தன்மை முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இருக்கும் என்று பிட்ச் தலைமை பராமரிப்பாளர் இசாக் மெக்டொனால்டு எச்சரித்துள்ளார்.
இதனால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முதல் போட்டியே பெரும் தலைவலியாக இருக்கப்போகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வெறும் 89 ரன்னில் சுருண்டது.
அதே சமயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் ‘பவுன்ஸ்’ பந்துகளில் உடலில் அடிவாங்கினர். குறிப்பாக லபுஸ்சேன் எனது வாழ்க்கையில் விளையாடிய கடினமான பிட்ச் இது தான் என்று அப்போது குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலன்ட் ஆகியோரும் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.