வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்றது. இதனால் பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோல்வியடைந்தது.
முன்னதாக, அண்டை நாடாக இருப்பதால் இந்தியாவை விட பாகிஸ்தான் சிறந்த அணியாக உள்ளது என்று அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பெருமைப்படுவது வழக்கமாகும்.
அதற்கு மேல், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு அணியான சாகின் அப்ரிடி, நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப் ஆகியோர் உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களாக உள்ளனர் என்று அவர்கள் பெருமைப்படுவார்கள்.
இதனால் 2021 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பைகளில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று சோயப் அக்தர் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இடையிலான பேட்டிகளில் கூறி வந்தனர்.
ஆனால், இந்திய அணி அவர்கள் எதிர்பார்த்ததை முறியடித்து, 2022 டி20 உலகக் கோப்பையும், 2023 ஆசியக் கோப்பையும் வென்று சாதனை படைத்தது. அதேபோல், உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்று வரலாற்று சாதனை படைத்தது. மறுபுறம், சமீப காலங்களில் ஜிம்பாப்பே, அமெரிக்கா போன்ற தாழ்த்தப்பட்ட அணிகளிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், தற்போது சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் கடைசியாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது 0 நாட்கள் ஆகிறது.
இதேபோல், வெஸ்ட் இண்டீஸ் 18 நாட்கள் முன்பு, வங்கதேசம் 154 நாட்கள் முன்பு, நியூசிலாந்து 177 நாட்கள் முன்பு, இலங்கை 405 நாட்கள் முன்பு, இங்கிலாந்து 1179 நாட்கள் முன்பு, ஆஸ்திரேலியா 1324 நாட்கள் முன்பு, தென்னாப்பிரிக்கா 1682 நாட்கள் முன்பு தங்களது சொந்த மண்ணில் கடைசியாக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தன.
ஆனால், இந்த பட்டியலில் உலகிலேயே உச்சகட்டமாக இந்தியா தான் 4279 நாட்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோற்காமல் விளங்குகிறது. கடைசியாக, 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதன் பின் 12 ஆண்டுகளாக, 4279 நாட்களாக ஒரு தொடரிலும் தோற்காமல் மிரட்டும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானால் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உச்சகட்ட செயல்பாடுகளை இந்திய அணி வெளிப்படுத்தி வருகிறது.