2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டமைக்கு அப்போதையை கேப்டன் டோனியே காரணம் என, தேர்வு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ராஜா வெங்கட் தெரிவித்து உள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பை, 2009 மற்றும் 2010 டி20 உலகக் கோப்பை அணிகளில் இடம் பெற்று இருந்த ரோஹித் சர்மா 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் மாற்று வீரராகவாவது இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அத்துடன், தேர்வு குழுவினரும் ரோஹித் சர்மாவை 15 வது வீரராக அணியில் சேர்த்து இருந்த நிலையில், கேப்டன் தோனி 15 வது வீரராக சேர்க்கப்பட்டிருந்த ரோஹித் சர்மாவை நீக்க சொல்லிவிட்டு, பியூஷ் சாவ்லா பெயரை சேர்க்குமாறு தேர்வு குழுவினரிடம் கூறி உள்ளார்.
தோனியின் இந்த தீர்மானத்தை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனும் ஏற்றுக்கொண்டதால், வேறு வழி இன்றி தேர்வுக் குழுவினர் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு பியூஷ் சாவ்லாவை சேர்த்தனர்.
இந்த தகவலை ராஜா வெங்கட் ஒரு பேட்டியில் விரிவாக கூறியிருக்கிறார்.
ரோஹித் சர்மா உலகக்கோப்பை வாய்ப்பை இழந்ததாலும், கடுமையாக உழைத்து இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் துவக்க வீரராக களம் இறக்கினார். அப்போதிருந்து இப்போது வரை உலகின் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மா இருக்கிறார்.